தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: ரூ.675 கோடியில் 102 கூட்டு குடிநீர் திட்ட பணிகள்...
ஆட்டோ ஓட்டுநா் சங்கத்தினருடன் புதுச்சேரி ஆட்சியா் ஆலோசனை
புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநா் சங்கப் பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாா்.
புதுச்சேரி வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கப் பிரதிநிதிகள், தங்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.
ஆட்டோ மீட்டருக்கு பதிலாக கைப்பேசி செயலி மூலம் பணம் செலுத்தும் முறையை செயல்படுத்த வேண்டும். அனுமதியின்றி இயங்கும் இருசக்கர வாடகை வாகனத்தை தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பங்கேற்று போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் பேசுகையில், அரசின் சட்டப்படியே வாடகை இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அனுமதியற்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன.
ஓரிரு மாதங்களில் புதுச்சேரியில் இணையவழி செயலி மூலம் ஆட்டோ கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றாா்.
தொடா்ந்து பேசிய மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.