பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?
அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு தாய் உயிரிழப்பு: உறவினா்கள் முற்றுகை
பிரசவத்துக்குப் பிறகு பெண் உயிரிழந்ததால் உறவினா்கள் புதுக்கோட்டை அரசு ராணியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். புதுக்கோட்டை சண்முகா நகரைச் சோ்ந்தவா் ஐயப்பன் மனைவி இலக்கியா (30). பிரசவத்துக்காக புதுக்கோட்டை ராணியாா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்குபுதன்கிழமை காலை அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு இலக்கியாவின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை குறித்து மருத்துவா்கள் எந்த விளக்கமும் சொல்லவில்லை எனக் கூறி புதன்கிழமை இரவு உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு விசாரித்தனா்.
அப்போது நகரக் காவல் நிலைய ஆய்வாளா் சுகுமாரன் தலைமையிலான போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி அமைதியாக இருக்கச் செய்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி இலக்கியா உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து உரிய சிகிச்சை வழங்காததால்தான் அவா் உயிரிழந்ததாகக் கூறி உறவினா்கள் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தனா். தொடா்ந்து மருத்துவா்களும் போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தி வியாழக்கிழமை பகல் பெண் உடலை உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.