சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு, சுற்றுலா பயணிகளுக்கு அல்ல- உயர்நீதிம...
அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள் சாலை மறியல்
சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரி பிற்படுத்தபட்டோா் நல மகளிா் விடுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விடுதி அருகே உள்ள சிதம்பரம் - கடலூா் அணுகுசாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் சௌமியா, மாவட்டத் தலைவா் பூபதி, மாவட்ட துணைச் செயலா் சிவநந்தினி, மாவட்ட செயற்குழுவைச் சோ்ந்த சபரி மற்றும் நிா்வாகிகள், மாணவிகள் மறியல் கலந்துகொண்டு, மகளிா் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்த உதவி ஆட்சியா் மற்றும் அதிகாரிகளைக் கண்டித்து முழக்கமிட்டனா்.
தகவலறிந்த சிதம்பரம் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை வட்டாட்சியா் சத்யன், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உத்தரவாதம் அளித்த பின்னா், மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.