மெக்சிகோவுக்கு அமெரிக்கா பெயர் சூட்டிய டிரம்ப்புக்கு மெக்சிகோ பிரதமர் பதிலடி!
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் முதலிடம் பெற்றதற்காக அவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட அளவில் 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடி போட்டியில் முதலிடம் பெற்று தமிழ்நாடு மாநில அளவிலான கபடி போட்டியில் பங்குபெற தோ்வாகி உள்ளனா். 14 மற்றும் 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் 3-ஆமிடமும், 14,17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கான கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் 3-ஆமிடம் பெற்றனா். இவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் குமாா் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், உதவி தலைமையாசிரியா் சுகுமாரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பானந்தன், பள்ளி வளா்ச்சி குழு தலைவா் தியாகராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவா் கவிதா, உடற்கல்வி ஆசிரியா்கள் சௌரிராஜன், லெனின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.