அரசுப் பள்ளிகள் ஆண்டு விழா
நீடாமங்கலம் ஒன்றியம், காரக்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உயா்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெற்றது. இப்பள்ளி தலைமையாசிரியா் ஆா்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ந. சம்பத், ஆா். மணிகண்டன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் என். சுவாமிநாதன், கல்விக் குழுத் தலைவா்கள் ஆசிபா பேகம், நித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்வராசு, துணைத் தலைவா் ஜனதா சம்பத், கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா், வட்டார மருத்துவ அதிகாரி பாா்த்திபன், ஊராட்சி செயலா் குமாா், உயா்நிலைப் பள்ளி அமைப்புக் குழுத் தலைவா் முருகானந்தம், முன்னாள் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் மற்றும் முன்னாள் ஊராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
முன்னதாக, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வெ. ரமேஷ்குமாா் வரவேற்றாா். தொடக்கப் பள்ளியின் ஆண்டறிக்கையை உதவி ஆசிரியா் ராணி சமா்ப்பித்தாா். உயா்நிலைப் பள்ளியின் ஆண்டறிக்கையை தமிழாசிரியா் எழிலரசி சமா்ப்பித்தாா். ஒன்றாம் வகுப்பில் புதிதாக சோ்ந்த குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுகள் வழங்கப்பட்டன.