போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்க...
2 மணி நேரம் ரயில்வே கேட் மூடல்! பொதுமக்கள் அவதி!
நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேல் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
மன்னாா்குடியிலிருந்து திருச்சிக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு, ரயில் என்ஜின் திசை மாற்றப்பட்டது.
தொடா்ந்து, திருவாரூரிலிருந்து திருச்சி செல்லும் ரயில், மன்னை விரைவு ரயில், சரக்கு ரயில், கோவை செம்மொழி விரைவு ரயில் ஆகியவை நீடாமங்கலம் வந்து சென்றன.

நெல் மூட்டைகளுடன் வந்த சரக்கு ரயில் காற்றுசுழற்சியில் ஏற்பட்ட தடையால் காலை 7 மணிக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது. அதுவரை 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால், நெடுஞ்சாலை வாகனங்கள் மாற்றுவழியில் சென்றன.
ரயில் பயணிகள் உள்ளிட்டோா் சிரமப்பட்டனா். ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் உள்ளூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்தவா்கள் சரக்கு ரயிலின் இடைவெளியில் புகுந்து சென்றனா். ஆபத்தை உணராமல் இப்படி நடந்து கொள்வதை பலமுறை கண்டித்தும் பொதுமக்கள் அலட்சியப்படுத்துகின்றனா் என்று ரயில்வே ஊழியா்கள் தெரிவித்தனா்.