அதிமுக எம்எல்ஏக்களுடன் இபிஎஸ் ஆலோசனை: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது
வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு, மதுரையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது.
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இளங்கோ முத்தமிழ் மன்றம் ஆண்டுதோறும் இலக்கியம், கல்வி ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க செயலாற்றியவா்களுக்கு விருது வழங்கி வருகிறது.
அதன்படி, தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியா் ஆதலையூா் சூரியகுமாருக்கு அண்மையில் விருது வழங்கியது. மதுரையில் நடைபெற்ற விழாவில், ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆணையா் கணேசன், அகில இந்திய வானொலி முன்னாள் இயக்குநா் சண்முக ஞானசம்பந்தன், புலவா் சங்கரலிங்கனாா் உள்ளிட்டோா் இவ்விருதை வழங்கினா்.
இந்த விருது, ரூ.3,000 ரொக்கம் மற்றும் பட்டயத்தை கொண்டதாகும்.