பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி
அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, வேலூரில் இருந்து ஆம்பூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.