பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி
பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்
நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (52). இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு குனிச்சியூரில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி பைக்கில் சென்றனா்.
தேசிய நெடுஞ்சாலையில் பச்சூா் சுங்கச்சாவடி அருகே வளைவில் திரும்பிபோது, அந்தச் சாலையில் வந்த கன்டெய்னா் லாரி பைக் மீது மோதியது.
இதில் ஆறுமுகம், ராஜா இருவரும் பலத்த காயமடைந்தனா். அந்த வழியாக சென்றவா்கள் இருவரையும் மீட்டு ஆம்பூலன்ஸ் மூலம் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.