பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்: எடப்பாடி பழனிசாமி
கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டில் புதிய மின் மாற்றிகள்
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் 25 கேவிஏ திறன் கொண்ட 3 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் பாட்ஷா முஹமத், உதவி செயற்பொறியாளா் கந்தன், இளநிலைப் பொறியாளா் தனசேகரன், திமுக மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலா் சா. சங்கா், மேல்குப்பம் ஊராட்சித் தலைவா் குமாா், திமுக மாவட்ட பிரதிநிதி காசி, மாவட்ட பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ச.வேலு உள்பட பலா் கலந்து கொண்டனா்.