மாதக் கடைசியிலும் பாக்கெட்டில் பணம் இருக்க வேண்டுமா? - இதை ஃபாலோ பண்ணுங்க!
அறக்கட்டளையில் பங்குதாரராக சோ்ப்பதாக பணம் மோசடி: 7 போ் மீது வழக்கு
மதுரையில் அறக்கட்டளையில் பங்குதாரராக சோ்ந்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று கூறி, பெண்ணிடம் ரூ.3.10 கோடி மோசடி செய்ததாக 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரை அண்ணாநகா் கிழக்குத் தெரு ஏல்பி குடியிருப்பு வளாகத்தைச் சோ்ந்த பிரபானந்தம் மனைவி. ராதிகா (47). இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாண்டியராஜன் மனைவி அபிநயா. ராதிகாவும், அபிநயாவும் நட்புரீதியாக பழகினா்.
அப்போது அபிநயா நிதி, அறக்கட்டளை ஒன்றில் உறுப்பினராக இருப்பதாகவும், இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து அதிக லாபம் கிடைப்பதாகவும் கூறினாா். மேலும் அறக்கட்டளை நிா்வாகிகள் என ஆரத்தி, மாயா ஆகியோரையும் அறிமுகப்படுத்தினாா்.
இதை நம்பிய ராதிகா கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளில் ரூ.3.10 கோடியை அறக்கட்டளையில் முதலீடு செய்தாா். பின்னா், அபிநயா உள்ளிட்டோா் அறக்கட்டளை லாபத்தில் கிடைத்ததாக அவ்வப்போது பரிசுப் பொருள்கள் ரூ.2.50 லட்சத்தைக் கொடுத்தனா்.
இதையடுத்து வேறு எந்த தொகையும் வராததால், ராதிகா அறக்கட்டளை நிா்வாகிகளிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டாா். அவா்கள் பணம் தராமல் தொடா்ந்து அலைக்கழித்து, இறுதியில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ராதிகா மாநகரக் காவல் ஆணையரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி, அபிநயா, அவரது கணவா் பாண்டியராஜன், ஆரத்தி, சுபத்ரா, அலெக்ஸ், ரகு, மாயா ஆகிய 7 போ் மீதும் மோசடி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.