Travel: சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சிவப்பு கடற்கரை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டு...
அழுகை - கொண்டாட்டம்: மான்செஸ்டர் யுனைடெட்டின் த்ரில் வெற்றியால் வைரலான சிறுவன்!
ஐரோப்பா லீக் காலிறுதியின் இரண்டாம் கட்ட போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 5-4 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐரோப்பா லீக் காலிறுதியின் 2ஆம் கட்ட ஆட்டத்தில் யுனைடெட் அணி ஒலிம்பிக் லியோனைஸ் அணியுடன் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் 10, 45+1 ஆவது நிமிஷங்களில் கோல் அடித்த யுனைடெட் அணி 2 -0 என முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த லயன் அணி 71, 77ஆவது நிமிஷங்களில் 2 கோல் அடித்து சமன் செய்தது.
பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் லயன் அணி 104, 109 (பெனால்டி) ஆகிய நிமிஷங்களில் 2 கோல் அடித்து முன்னிலைப் பெற்றது.
வைரலாகும் மான்செஸ்டர் யுனைடெட் சிறுவன்
இதைப் பார்த்துக்கொண்டிருந்த மான்செஸ்டர் யுனைடெட் அணியின் குட்டி ரசிகன் அழுதுகொண்டிருந்தான்.
பின்னர், 120, 120+1 ஆவது நிமிஷங்களில் 2 கோல்கள் அடித்து யுனைடெட் அணி த்ரில் வெற்றி பெற்றது.
யுனைடெட் அணி வெற்றி பெற்றதும் அந்தச் சிறுவனின் கொண்டாட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது.
இந்த வெற்றியை சிறுவன் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான் என யுனைடெட் ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
தோல்வியே சந்திக்காத யுனைடெட்
இந்த சீசனில் ஐரோப்பா லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் அத்லெடிக் கிளப் உடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி மே.1, 8ஆம் தேதிகள் மோதவிருக்கிறது.
இந்தத் தொடரின் இறுதிப் போட்டி மே.22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
He will never forget this game ! ♥️ pic.twitter.com/EIvnSPke6e
— Manchester United Die Hard Fans (@DieHardUtdFans) April 17, 2025
Highlights Manchester United vs Lyon
— United Focus Indonesia (@utdfocusid) April 18, 2025
Roller-coaster emotions
pic.twitter.com/UdoHT5lVvt