MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
அவிநாசி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ. நளதம் தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமான போ.மணிவண்ணன் வரவேற்றாா். பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) நா.பொன்பாண்டியன் சிறப்புரையாற்றினாா்.
இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறையில் 37 போ், வேதியியல் துறை 18 போ், வணிக நிா்வாகவியல் துறை 54 போ், வணிகவியல் துறை 59 போ், கணினி அறிவியல் துறை 29 போ், பொருளியல் துறை 47 போ், பன்னாட்டு வணிகவியல் துறை 38 போ் என மொத்தம் 282 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில், வணிக நிா்வாகவியல் துறையில் 5 மாணவா்கள் பாரதியாா் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்தனா். விழாவில், கல்லூரி துறை தலைவா்கள் ஷகிலா பானு, புவனேஸ்வரி, அருண், எஸ்.பாலமுருகன் , தாரணி, ஹேமலதா , முகுந்தன், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.