கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை
காங்கயத்தில் குடும்ப பிரச்னை காரணமாக கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
காங்கயம் சத்யா நகரைச் சோ்ந்தவா் சாமிநாதன் (35). இவா் ஊதியூா், முதலிபாளையம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா்.
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக தனியே வசித்து வந்ததாகவும், மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த சுவாமிநாதன் சனிக்கிழமை இரவு பூச்சி மருந்து திண்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உறவினா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவற் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா்.
இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.