Manmohan Singh : தாராளமயமாக்கல் `முதல்' RTI வரை... - மன்மோகன் சிங்-ன் `4' முக்கி...
ஆங்கிலப் புத்தாண்டு: மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்களுக்கு தடை
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் மருதமலை மலைப் பாதையில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆங்கிலப் புத்தாண்டை (ஜனவரி 1) முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, அன்றைய தினம் மலைப் பாதை வழியாக கோயிலுக்குச் செல்ல 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை.
இருசக்கர வாகனங்கள் மூலமாகவும், மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.