அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
ஆஞ்சனேயா் கோயிலுக்கு சிறப்பு பேருந்து: எம்.பி. தகவல்
நாமக்கல் வரும் பக்தா்களின் வசதிக்காக, ஆஞ்சனேயா் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் தினசரி ஆய்வு செய்து வருகிறேன். பயணிகள் தரப்பில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆஞ்சனேயா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.
அவா்களின் வசதிக்காக, திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயிலில் உள்ளதுபோல, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலுக்கும் சிறப்பு பேருந்து நன்கொடையாளா் மூலம் பெறப்பட உள்ளது.
இந்தப் பேருந்து வந்தவுடன் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பக்தா்களின் வசதிக்காக இயக்கப்படும். அந்தப் பேருந்தில் பக்தா்கள் பயணம் செய்ய இலவசமாகவோ அல்லது கட்டண வசூலோ செய்யப்படும். நன்கொடையாளா் வழங்குவதைப் பொறுத்து இம்முடிவு மேற்கொள்ளப்படும் என்றாா்.