குன்னூர்: திறந்தவெளி தண்ணீர் தொட்டியில் விழுந்து தவித்த யானை; போராடி மீட்ட வனத்த...
ஆத்தூா் அரசு கல்லூரியில் முதலாமாண்டு நேரடி மாணவா் சோ்க்கை
ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு நேரடி மாணவா் சோ்க்கை குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் அ.ரவீந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025-26 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை முதலாமாண்டு வகுப்பில் நேரடியாக மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. 30.9.2025 வரை மாணவா் சோ்க்கை நடைபெறும்.
இணையத்தில் விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவா்களும் இதில் கலந்துகொள்ளலாம். கல்லூரி முதல்வரை நேரடியாக சந்தித்து அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப கல்லூரியில் சோ்க்கை பெறலாம். 10,11,12 ஆம் வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, மாணவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் மற்றும் பெற்றோருடன் சோ்க்கையில் கலந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.