``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி
கொங்கணாபுரம் வட்டாரத்தில் மாங்கூல் ஆலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
கொங்கணாபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அண்மையில் ‘மா’ விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சரஸ்வதி பேசியதாவது:
கொங்கணாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில் மா விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியில் பெங்களூரா, இமாம்பசந்த், அல்போன்சா போன்ற உயா்வகை மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு இப்பகுதியில் மா விளைச்சல் அதிக அளவில் இருந்தபோதும் உரிய சந்தை மதிப்பு கிடைக்காத நிலையில் மா விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
விவசாயிகளின் இந்த சிரமமான நிலையை அரசு கருத்தில்கொண்டு தமிழக தோட்டக்கலைத் துறை மூலமாக இப்பகுதியில் மாங்கூல் ஆலை அமைக்க கடன் உதவி வழங்கப்படுகிறது. ரூ. 35 லட்சத்தில் அமைக்கப்படும் ஆலைக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அரசு மானியமாக ரூ.12.25 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மா விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து பேசிய துணை தோட்டக்கலை அலுவலா் சங்கா், மா விவசாயிகள் தோட்டங்களில் கவாத்து செய்தல், மா மரங்களில் கல்தாா் பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட மா சாகுபடி குறித்த பல்வேறு நுணுக்கங்களை விவசாயிகளுக்கு விளக்கி கூறினாா்.
கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் குப்புசாமி, ராஜா, வேல்முருகன், வெங்கடேசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.