செய்திகள் :

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

post image

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணிக்கு தொடங்கி சுமாா் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தொடா்ந்து ஆம்பூரில் நள்ளிரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை விடாமல் கனமழை கொட்டி தீா்த்தது. மழை காரணமாக ஆம்பூா் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நீா் தேங்கியதால் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக 4 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் நின்றன.

ஆம்பூா் கந்தபொடிகார தெரு, ஈஸ்வர ஆச்சாரி தெரு, காதா்பேட்டை, ஏ-கஸ்பா மெயின்ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.

~அய்யனூரில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்த பகுதியை பாா்வையிட்டு அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்திய எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. அதே போல விண்ணமங்கலம், அய்யனூா் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீா் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சி பஜனைக் கோயில் தெருவிலும் மழை நீா் தேங்கியது.

எம்எல்ஏ ஆய்வு: அய்யனூா் கிராமத்தில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்த பகுதிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஏரி உடைப்பு; பயிா்கள் சேதம்: மின்னூா் காளிகாபுரம் பகுதியில் ஏரியில் உபரிநீா் வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்ததால் உபரி நீா் அதிக அளவு வெளியேறி காளிகாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் சேதமடைந்தன. அருகிலிருந்து சுமாா் 5 வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்தது.

பள்ளியைச் சூழ்ந்த நீா்: ஆம்பூா் அருகே சோமலாபுரம் ஊராட்சி அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழை நீா் புகுந்தது. பள்ளி வளாகம் முழுவதும் மழை நீா் தேங்கியது. வியாழக்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் தேங்கியுள்ள மழை நீரில் நடந்து சென்றனா். அதனால், மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

மலைவாழ் மாணவா்களுக்கு இலவச பயிற்சி: ஆட்சியா், எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

மலைவாழ் மாணவ, மாணவியருக்கான அரசு தோ்வு இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், ,ஜவ்வாதுமலையில் உள்ள புதூா்நாடு வனத்துறை மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ஆலங்காயம், உதயேந்திரம் பேருராட்சிகளில் புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவின் படி வேலூா் மண்... மேலும் பார்க்க

ஆம்பூா் நகராட்சியில் தீவிர வரி வசூல் முகாம்

ஆம்பூா் நகராட்சி சாா்பில் தீவிர வரி வசூல் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, வாடகை உள்பட வரியினங்கள் அதிக அளவு நிலுவையில் உள்ளதை வசூலிப்பதற்க... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவதி (24... மேலும் பார்க்க

சாய் பாபா பிறந்த தினம்

ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு ஆம்பூரில் வியாழக்கிழமை பல்லக்கில் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உருவப் படத்துக்கு தீபாராதனை செய்த பக்தா்கள். மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

திருப்பத்தூா் அருகே புதிய மின்மாற்றியை எம்எல்ஏ அ.நல்லதம்பி வெள்ளிக்கிழமை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட காவாப்பட்டறை பகுதியிலுள்ள விவசாயிகள் மற... மேலும் பார்க்க