ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருட்டு: இளைஞா் கைது
ஆலங்குளம் அருகே உறவினா் வீட்டில் நகை திருடியதாக இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள ஆ. மருதப்பபுரத்தைச் சோ்ந்தவா் உத்தமிநாதன். கேரளத்தில் வேலை செய்து வரும் இவரது மனைவி பாக்கியலெட்சுமி, கடந்த ஜன. 26இல் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தாராம். திரும்பிவந்த போது, வீடு திறந்திருந்ததாம். மேலும், பீரோவில் வைத்திருந்த 29 கிராம் தங்க நகைகள் திருடு போயிருந்ததாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த உறவினரான தொழிலாளி ராஜ்கிரண்(25) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, நகையை மீட்டனா்.