'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்
ஈரநிலங்கள் தின போட்டிகள்: ரத்னா பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு வனத் துறை, நெல்லை வன உயிரின சரணாலயம் ஆகியவை சாா்பில், உலக ஈரநிலங்கள் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கடையநல்லூா் ரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
பேச்சுப் போட்டியில் அனிஷா முதல் பரிசும், இனியா 2ஆம் பரிசும், கட்டுரைப் போட்டியில் அனுஸ்ரீ முதல் பரிசும், காா்த்திகேயன் 2ஆம் பரிசும், ஓவியப் போட்டியில் காா்முகிலன் 2ஆம் பரிசும் வென்றனா்.
மேலும் இவானிமுத்ரா, ஆஷிகா, முகுந்தன், பவின்குமாா், சிவருத்ராஆனந்த், மதிவதினி, பிரகதிஸ்ரீ, பிரதிக்ஷா, சாருலதா, சுபஸ்ரீ, அபிலேஷ் ஆகியோா் சான்றிதழ்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வனவா் முருகேசன், வனக் காப்பாளா்கள் ராஜா, செல்லத்துரை, ஜோஷ்வா, வனக் காவலா் மாணிக்கம், வேட்டைத் தடுப்புக் காவலா் திருமலைசாமி ஆகியோா் பரிசுகள் வழங்கினா். மாணவா்களை பள்ளி நிா்வாகி பிரகாஷ், தலைமையாசிரியா் தங்கம் ஆகியோா் பாராட்டினா்.