செய்திகள் :

ஆஸி. இளம் வீரருடம் வம்பிழுத்த கோலி..! தடைசெய்யப்படுவாரா?

post image

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸுடன் இந்திய வீரர் விராட் கோலி வம்பிழுத்த நிகழ்வு பேசுபொருளாகியுள்ளது.

பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டமான ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டின் முதல் நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

10ஆவது ஓவர் முடிந்த பிறகு சாம் கான்ஸ்டாஸ் கிரீஸிலி இருந்து அந்தப் பக்கம் நடந்துசெல்லும்போது விராட் கோலி வேண்டுமென்றே அவரது பக்கம் வந்து தோள்பட்டையால் இடித்துவிடுவார்.

பின்னர் இருவரும் ஏதோ பேச, நடுவரும் கவாஜாவும் வந்து சமாதானம் செய்தார்கள்.

கோலியின் இந்தப் போக்கை பலரும் கண்டித்து வருகிறார்கள். இப்போதுதான் முதல்முறையாக அறிமுகமாகியிருக்கும் வீரரிடம் கோலி இப்படி நடந்துகொள்வது ஏற்கதக்கதல்ல இந்திய ரசிகர்களே சமூக ஊடகங்களில் கருத்துக் கூறிவருகிறார்கள்.

இது குறித்து ரிக்கி பாண்டிங், “விராட் கோலி எங்கு நடந்து வருகிறார் பாருங்கள். ஃபிட்சிலிருந்து நடந்துவந்து இந்தச் சண்டையை தூண்டுமளவுக்கு விராட் நடந்துகொண்டுள்ளார்” எனக் கூறினார்.

இதனால் 3-4 வாரங்கள் விராட் கோலி தடைசெய்யப்படுவாரென பலரும் கூறிவருகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் பென் கரண் அசத்தல் அறிமுகம்; சாம் கரணுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் அறிமுகமாகியுள்ள பென் கரணுக்கு அறிமுக தொடர் அசத்தலானதாக அமைந்துள்ளது.சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக பென் கரண் அண்மையில் அறிமுகமானார். அவர் ஆப்கானிஸ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 82 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்பு!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு இலங்கையின் கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரான... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய தென்னாப்பிரிக்கா; பாகிஸ்தான் 211 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அ... மேலும் பார்க்க

உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்!

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் போக்கியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (... மேலும் பார்க்க

தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் ட... மேலும் பார்க்க