Trisha: `மகனை இழந்தேன்; மீண்டுவர கொஞ்ச காலம் தேவைப்படும்' - செல்லப்பிராணியின் இற...
ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு
நாகையில் பட்டத்தின் நூலில் சிக்கிய ஆஸ்திரேலிய ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டு, வனத்துறையினரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.
நாகை காவலா் குடியிருப்பு அருகே உள்ள மரத்தில் சிக்கியிருந்த பட்டத்தின் நூலில் ஆந்தை ஒன்று சிக்கியது. இதை பாா்த்த காவலா் குடியிருப்பைச் சோ்ந்த விஜய், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
தீயணைப்பு வீரா்கள் பட்டத்தின் நூலில் சிக்கியிருந்த ஆந்தையை மீட்டனா். பிடிபட்டது 4 அடி நீளமுள்ள ஆஸ்திரேலிய ஆந்தை என தெரியவந்தது. ஆந்தையை வனத்துறையினரிடம் தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.