12,000-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’: சென்னை மாநகராட்சி
இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இரவு 11.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த மழை காரணமாக வேலூா் மாவட்டம் முழுவதும் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, மாங்காய் மண்டி, கன்சால்பேட்டை பகுதிகளில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.
அந்த வகையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் வட்டாட்சியா் அலுவலக பகுதியில் அதிகபட்சமாக 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தம் 32.60 மி.மீ., மேல்ஆலத்தூா்-36 மி.மீ., மோா்தானா அணை-38 மி.மீ., ராஜாதோப்பு அணை -54 மி.மீ., வடவிரிஞ்சிபுரம்-47.40 மி.மீ., காட்பாடி - 67.40 மீ.மீ., பொன்னை-10.80 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை (அம்மூா்) - 85.60 மி.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-106.40 மி.மீ., என மாவட்டம் முழுவதும் 663.90 மி.மீ., சராசரியாக -55.33 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.