தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
இட்லிப் பொடியில் கரப்பான் பூச்சி
திண்டுக்கல்லில் இட்லிப் பொடியில் கரப்பான் பூச்சி கிடந்தது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் விசாரித்தனா்.
திண்டுக்கல் என்எஸ்.நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன். தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி அதே பகுதியிலுள்ள கடையில் 100 கிராம் எடை கொண்ட இட்லிப் பொடி பொட்டலத்தை ஞாயிற்றுக்கிழமை வாங்கினாா். இந்தப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிரபாகரன், உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில், சம்பந்தப்பட்ட இட்லிப் பொடி தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.