செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான பாட்டல் ராதா திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(பிப். 21) வெளியாகிறது.

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான வணங்கான் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் நாளை(பிப். 21) வெளியாகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஸ்வாரசிய நிகழ்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இணையத் தொடர் ஆபிஸ். இந்த தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரில் நாளை(பிப். 21) வெளியாகவுள்ளது.

இதையும் படிக்க: புன்னகைப் பூவே தொடரின் நாயகி மாற்றம்!

பாலி கொல்லி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள தெலுங்கு மொழிப் படமான டாகு மகராஜ் திரைப்படம் நாளை(பிப். 21) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

வி.பி. வினு இயக்கத்தில் அசோக் ரங்கராஜன் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான சாட்சி பெருமாள் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

இப்படங்களைத் தவிர்த்து, கடந்த வாரம் வெளியான மார்கோ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியிலும் மதுரை பையனும் சென்னை பொண்ணும் வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடியிலும் காணக் கிடைக்கிறது.

தெலுங்கு நடிகருடன் இணையும் இயக்குநர் மணிரத்னம்!

இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டியுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மணிரத்னம் இயக்கி கடைசியாக இரு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் திரை... மேலும் பார்க்க

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் வெளியானது!

நடிகர் சசிகுமார் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ இன்று வெளியாகியுள்ளது.நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளன. இவர் தற்... மேலும் பார்க்க

விடாமுயற்சி ‘சவதீகா’ பாடல் விடியோ!

விடாமுயற்சி படத்திலிருந்து சவதீகா பாடல் விடியோ வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருந்தது.‘மங்காத்தா’ ... மேலும் பார்க்க

சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்

சென்னை: எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான மதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் கீழ், சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிற... மேலும் பார்க்க

லிஜோ மோல் நடிக்கும் ஜென்டில்வுமன்... முதல் பாடல் வெளியீடு!

லிஜோமோல் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் ஒரே ஆணுடன் உறவிலிருக்கும் இரு பெண்களின் கதையாக ஜென்டில்வுமன் திர... மேலும் பார்க்க