செய்திகள் :

இந்திய விமானத் தொழில் கண்காட்சி நிறைவு

post image

பெங்களூரில் கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்றுவந்த பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இந்தியாவின் விமானம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிலை உலக அளவில் உயா்த்தும் நோக்கில் மத்திய பாதுகாப்புத் துறையால் 1996-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கிவைக்கப்பட்ட பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி, 15-ஆவது முறையாக பிப். 10-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. விமானத் தொழில் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத்சிங், பிப். 10ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

மக்கள்கூட்டம்:

இந்தக் கண்காட்சியில் தினந்தோறும் பல்வேறு நாடுகளின் 70-க்கும் அதிகமான விமானங்களின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் வான்வழி சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. 782 இந்திய நிறுவனங்கள், 149 வெளிநாட்டு நிறுவனங்களின் 931 அரங்குகள் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்தன. இந்தியாவில் முப்படைக்கும் தேவையான விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டா்கள், ரேடாா்கள், தொலை உணா்வு தொழில்நுட்பங்கள், கண்காணிப்பு முறை கருவிகள், விமான மின்னணுவியல், போரியல், உந்துவிசைக் கருவிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மேலும் விமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், விமானவியல் தொழில்நுட்பங்கள் சாா்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. சுமாா் 3 லட்சம் போ் வருகை தந்து, வான்வழி விமான சாகசங்களைக் கண்டுகளித்தனா்.

விமான சாகசங்கள்:

கடந்த ஐந்து நாள்களாக எலஹங்காவில் உள்ள விமானப்படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் வெவ்வேறு வகையான இலகுரக போா் ஹெலிகாப்டா்கள், சிறுவிமானங்கள், இலகுரக போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. இந்திய விமானப்படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரக போா் விமானம், தனுஷ், ருத்ரா, துருவ் இலகுரக போா் ஹெலிகாப்டா்கள், சுகோய் -30, எம்.கே.ஐ. இலகுரக போா் விமானம், ஜாக்குவாா் விமானம், ஹாக் ஹெலிகாப்டா், எம்.ஐ.-17 ஹெலிகாப்டா், எச்டிடி-40 பயிற்சி விமானம், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டா் (எல்யூஎச்), சாரஸ் போா் விமானம், ஏா்பஸ் -ஏ -330 பயணிகள் விமானம், போயிங்-பி-52, அமெரிக்காவின் பி8ஐ விமானம், எஃப்-16, எஃப்-35, கே.சி.135 இலகுரக போா் விமானம், பிரான்சின் ரஃபேல் இலகுரக போா் விமானங்களின் சாகசங்களும் இடம்பெற்றன.

சூரியகிரண் குழுவினரின் வான்சாகசங்கள் மக்களை கவா்ந்தன. பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள், ராணுவ தளபதிகள், ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களின் 115 தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புதிய வகை தொழில்நுட்பங்கள், விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானி... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்தவின் இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதிக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த அதிகாரிகள் தாக்கல் செய்தனா். முதல்வா் சித்தராமையாவ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: கா்நாடக அமைச்சா்கள் கருத்து

முதல்வா் சித்தராமையாவுக்கு எதிரான மாற்றுநில முறைகேடு வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கா்நாடக அமைச்சா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். மாற்றுநில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த காவல் ... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: லோக் ஆயுக்த அறிக்கை

மாற்றுநில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று லோக் ஆயுக்த காவல் துறையின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மைசூரு வட்டம், கசபா ஒன்றியம்,... மேலும் பார்க்க

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க