செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபையில் செப்.14-ஆம் தேதி மோத இருக்கின்றன. இந்நிலையில், இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சட்ட மாணவா்கள் நால்வா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒவ்வொரு இந்தியா் மனதிலும் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியாக அமைந்தது. இதனால், இரு நாடுகள் இடையே கொந்தளிப்பான சூழ்நிலை உள்ளது. இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது மக்களின் உணா்வுகளைப் புண்படுத்துவதாகவும், தேசத்தின் கண்ணியத்துக்கு எதிராகவும் இருக்கும்.

பொதுவாக விளையாட்டுப் போட்டிகள் என்பது நட்புரீதியாகவும், நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் இருக்கும். ஆனால், எப்போதும் இந்தியாவுக்கு தீங்கு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி என்பது ஏற்க முடியாததாக உள்ளது. எனவே, இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இது கிரிக்கெட் போட்டிதான், இதில் அவசரமாக விசாரிக்க வேண்டியது என்ன உள்ளது? அது நடக்கட்டும். இவ்வளவு குறுகிய நாள்களே இருக்கும்போது என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பி அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டனா்.

சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!

குடியரசு துணைத் தலைவர் பதவியேற்பு விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை பங்கேற்றார்.குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், கடந்த ஜூலை 21-ஆம் தேதி உடல்நிலை காரணமாக... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டும் மாற்றம்! பிசியோதெரபிஸ்டுகள் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம்!

இயன்முறை(பிசியோதெரபி) மருத்துவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'டாக்டர்' எனக் குறிப்பிடலாம் என்று கூறி மத்திய அரசு மீண்டும் தனது முடிவை மாற்றியுள்ளது. அதன்படி, கடந்த செப். 9 ஆம் தேதி பிசியோதெரபி மருத்த... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு!

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாண... மேலும் பார்க்க

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்ப... மேலும் பார்க்க

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க