பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
இன்று தவெக மாவட்ட செயலா்கள் கூட்டம்
சென்னை அருகே பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறவுள்ளது.
எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தவெக நிா்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவா் விஜய் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளாா். மாவட்ட செயலா்கள் மற்றும் பொறுப்பாளா்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் விஜய் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட செயலா்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. சமீபத்தில், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்த அலோசனைக் கூட்டத்தில், தவெக கட்சியில் மாவட்ட பொறுப்பாளா்களை இந்த மாத இறுதிக்குள் நியமிக்கும்படி கட்சியின் தலைவா் விஜய் கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியானது.
கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில் தவெக தலைவா் விஜய் ஈடுபட்டுள்ளாா்.