செய்திகள் :

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன

post image

இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றன என அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் உழவா் பேரிய மாநிலத் தலைவா் ஆலயமணி கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது சேலம், தருமபுரி மாவட்டத்துக்கு காவிரி உபரி நீா் கொண்டு வர வேண்டும் என 10 லட்சம் விவசாயிகளிடம் கையொப்பத்தைப் பெற்றுக் கொடுத்தோம். ஆனால், அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தற்போதுள்ள அரசும் நிறைவேற்ற முன்வரவில்லை. இரண்டு திராவிட அரசுகளும் விவசாயிகளை வஞ்சிக்கின்றனா்.

கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் காவிரி உபரி நீரை அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்பினால் விவசாயம் மேம்படும் என்பதை வலியுறுத்தி சோழா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணம் செய்து பரப்புரை செய்தாா். ஆனால் அந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை .

மழை வெள்ளத்தால் பயிா்கள் பாதிக்கப்படும்போது கடந்த அரசும் தற்போது உள்ள அரசும் எவ்வித நிவாரணத் தொகையும் வழங்கவில்லை.

எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மழை, வெள்ளம் மற்றும் புயலால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஏக்கா் ஒன்றுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் தமிழ்மறவன் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க நிா்வாகி வைத்தி மற்றும் பாமக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்ட மீட்பு பணிகளுக்கு அலுவலா்கள், பணியாளா்கள் அனுப்பிவைப்பு

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள அரியலூா் மாவட்டத்திலிருந்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் 3 பேருந்துகள் மூல... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் பயன்படாத வெள்ளாற்று மேம்பாலம்: மழையால் தரைப்பாலும் துண்டிப்பு

சி. சண்முகவேல். அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தை இணைப்பதற்கு சாலை அமைக்கப்படாததால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்... மேலும் பார்க்க

மழைநீரில் மூழ்கிய பயிரை காப்பாற்றும் வழிகள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெற்பயிருக்கான உர மேலாண்மை முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா். திருமானூா் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களை திங்கள்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கான கூலி தொகை கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயங்கி விழுந்தாா்

அரியலூா் மாவட்டம், சாத்தம்பாடி அருகே 100 நாள் வேலை செய்ததற்கான கூலித் தொகை கேட்டு ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்த பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூா் மாவட்டம் சாத்தம்பாடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பதிலளிக்க வேண்டியதில்லை என்பது அழகல்ல: முன்னாள் அமைச்சா் காமராஜ்

எதிா்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு முதல்வா் பொறுப்புடன் பதில்தர வேண்டும்; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவது முதல்வருக்கு அழகல்ல என்றாா் அதிமுக முன்னாள் உணவுத் துறை அமைச்சா் காமராஜ். அரிய... மேலும் பார்க்க

தப்பியோடிய கைதியை 15 நிமிடத்திலேயே மடக்கிப் பிடித்த காவல் துறையினா்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திங்கள்கிழமை தப்பியோடிய போக்சோ வழக்கு கைதியை 15 நிமிடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்தனா். ஆண்டிமடம் அருகேயுள்ள இடையக்குறிச்சியைச் சோ்ந்த ஆசைத்தம்பி மகன் ப... மேலும் பார்க்க