’நான் மாடர்ன் பொண்ணு, அழுமூஞ்சி கிடையாது, அப்படி நடிக்க பிடிக்கல’ - நடிகை அஸ்வின...
`இருக்கு ஆனா இல்ல...' - ஐ.நா-வால் `நாடாக' அங்கீகரிக்கப்படாத நாடுகள் பற்றி தெரியுமா?!
எல்லைகள், பாஸ்போர்ட்டுகள், தேசிய கீதங்கள் இவை ஒரு நாட்டின் அடையாளங்களாக கருதப்படுகிறது. சில இடங்கள் நாடுகளைப் போலவே செயல்படுகின்றது.
ஆனால் அவற்றை உலகின் பிற நாடுகள் நாடுகளாக கருதுவதில்லை. அப்படி நாடுகளாக அங்கீகரிக்கப்படாத இடங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்

டிரான்ஸ்னிஸ்ட்ரியா
மால்டோவாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட பகுதி தான் டிரான்ஸ்னிஸ்ட்ரியா. இது ஒரு நாட்டைப் போல் தனது சொந்த நாணயம், அரசாங்கம், ராணுவம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவ்வளவு ஏன் டிரான்ஸ்னிஸ்ட்ரியா தனது சொந்த பணத்தை அச்சிட்டு (வேறு யாரும் ஏற்றுக்கொள்ளாத) ஒரு உண்மையான நாடு போல் செயல்படுகிறது. ஆனால் ஐ.நா இதனை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.

சீலாந்து
இங்கிலாந்து கடற்கரையில் இருந்து தன்னை ஒரு சுதந்திர நாடு என்று அழைத்துக் கொள்ளும் ஒரு சிறிய பகுதி தான் சீலாந்து. அரச குடும்பம், பாஸ்போர்ட்டுகள், ஒரு தேசிய கால்பந்து அணி என ஒரு நாடாக செயல்படும் சீலாந்தை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.
சோமாலிலாந்து
ஒரு சாதாரண நாடு செய்யும் அனைத்தையும் சோமாலிலாந்து செய்கிறது. அதற்கென தேர்தல்கள், செயல்படும் அரசாங்கம், நிலையான பொருளாதாரம், சொந்த ராணுவம் என அனைத்தையும் கொண்டுள்ளது.. ஆனாலும் இந்த நாடு அங்கீகரிக்கப்படாத நாடாகவே கருதப்படுகிறது.
லிபர்லாந்து
இது குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் மேற்குப் பகுதியில் உரிமை கோரப்படாத நிலத்தில் உள்ள ஒரு மைக்ரோநேஷனாகும். 2015 அன்று செக் சுதந்திர ஆர்வலர் விட் ஜெட்லிச்காவால் நிறுவப்பட்டது. ஒரு தனி நாடு போல் செயல்பட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள எந்த நாடும் லிபர்லாந்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.