10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவெற்றியூா் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னையா மகன் மூா்த்தி (35) என்பவா், ஞாயிற்றுக்கிழமை தொண்டியிலிருந்து திருவெற்றியூா் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது, எதிரே கள்ளிக்குடியிலிருந்து தொண்டி நோக்கி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில், மூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த தொண்டி போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று மூா்த்தி உடலை மீட்டு கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.