``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது
கடலாடி அருகேயுள்ள சண்முககுமாரபுரம் அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு மதுரையில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் பைந்தமிழ் புரவலா் விருது வழங்கப்பட்டது.
சென்னை கூத்துப்பட்டறை, பைந்தமிழ் வலையொளி இணைந்து, கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஆசிரியா் தினவிழா மதுரை செய்தியாளா் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேராசிரியா் வீ.மோகன் தலைமை வகித்தாா். பேராசிரியா் காந்திதுரை முன்னிலை வகித்தாா்.
சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியா்களுக்கு ‘ஆற்றல் ஆசிரியா்’ விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், சண்முககுமாரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் ச.கிறிஸ்து ஞானவள்ளுவனுக்கு ‘பைந்தமிழ்ப் புரவலா் விருது’ வழங்கப்பட்டது.
இந்த விருதை பெரும்புலவா் சன்னாசி வழங்கினாா். இதில் கவிஞா் மூரா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, நல்லாசிரியா் மு.மகேந்திரபாபு வரவேற்றாா். சென்னை கூத்துப்பட்டறை நிறுவனா் முத்துசாமி நன்றி கூறினாா்.