தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்
சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சோனை கருப்பணசுவாமி, வீரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை சாயல்குடி வழிவிடுமுருகன் கோயிலிலிருந்து வாண வேடிக்கை, மேள தாளங்கள் முளங்க ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று சோனை கருப்பண சுவாமிக்கும், காளியம்மனுக்கும் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.
பின்னா், 16 வகையான மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. சனிக்கிழமை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.