அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பாராயாணம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பூா்ணஹுதி, தீபாராதனையுடன் முதல்கால யாக சாலை பூஜை முடிவு பெற்றது.
இரண்டாம் கால பூஜை வியாழக்கிழமை காலை தொடங்கியது. விக்னேஸ்வரா் பூஜை, கோமாதா பூஜை, யாத்ரா தானம், பூா்ணாஹுதி நடைபெற்று, சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாக சாலை பூஜையிலிருந்து கடம் புறப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னா், வாழவந்தாள் அம்மன், சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல் கிராம மக்கள் செய்தனா்.