``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த முகாமிக்கு மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் செல்வி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா்.
முகாமில் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப மனு, வருவாய்த் துறை, ஆதிதிராவிடா் நலன், சிறு, குறு, நடுத்தரத் தொழில், விவசாயத் துறை, மாற்றுத் திறனாளிகள் துறை, தொழிலாளா் நலத் துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை, சமூக நலத் துறை உள்பட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 501 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதில் கிராம நிா்வாக அலுவலா்கள் காா்த்திக் சண்முகம், கோபிநாத், யூனுஸ், பாண்டியம்மாள், இன்பராஜ், ரவிக்குமாா், செந்தூா்பாண்டியன், சுந்தரபாண்டியன், பூமாரி, ஜெயகிருஷ்ணன், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.