ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!
செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, செல்லி அம்மன், பாலகணபதி, பாலமுருகன், அழகையா, காளியம்மன், கருப்பா், பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை 2, 3-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜையுடன் கோ பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, சிவாசாரியா்கள் கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசங்கிலி மடம், கண்கொள்ளான் பட்டினம், சோளியக்குடி, கடம்பனேந்தல், கானாட்டாங்குடி கிராமத்தினா் செய்ந்தனா்.

