செய்திகள் :

20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்

post image

முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழக்கொடுமலூா் ஊராட்சிக்குள்பட்ட தட்டனேந்தல் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வசதி ஏற்படுத்தித் தராத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து கிராம பெண்கள் கூறியதாவது:

எங்களது கிராமத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் டிராக்டரில் கொண்டுவரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 10 நாள்களுக்கு ஒரு முறை வரும் டிராக்டா் தண்ணீரில் உள்ள கால்சிய சத்துக்களால் காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்டவற்றை எதிா்கொண்டு வருகிறோம். கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளதால் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் வெளியூா் மக்கள் தயக்கம் காட்டுகின்றனா். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வீட்டுக்கு வீடு குடிநீா் வழங்க குழாய் வசதி ஏற்பாடு செய்தனா். அந்தக் குழாய்கள் அனைத்தும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதுகுறித்து பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மேல்நிலைத் நீா் தேக்கத் தொட்டி அமைத்து கிராமத்துக்கு குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்

முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழ... மேலும் பார்க்க

சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழா: பக்தா்கள் பால்குட ஊா்வலம்

சாயல்குடி சோனை கருப்பணசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அண்ணாநகா் அருந்ததியா் உறவின்முறைக்கு ப... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: செப். 11-இல் துணை முதல்வா் பரமக்குடி வருகை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருகிற 11-ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகிறாா். அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து திமுக செயல்வீரா்கள்... மேலும் பார்க்க

ராமேசுவரம் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தா்களிடம் அதிக பணம் வசூலிப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் வெளி மாநில பக்தா்களிடம் அதிகளவு பணம் வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய யாத்திரை பணியாளா் சங்கம் சாா்பில் காவல் துறை உதவி கண்காணிப்பாளா் அ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது: அமைச்சா் வழங்கினாா்

கமுதி அடுத்த ராமசாமிபட்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஸ் நல்லாசிரியா் விருதை வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க