10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
கஞ்சா வழக்கில் மேலும் ஒருவா் கைது
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள தீா்த்தாண்டதானம் கடற்கரைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் கஞசா விற்பனை செய்த இருவரைக் கைது செய்து அவா்களிடமிருந்து 78 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனத்தை எஸ்.பி பட்டினம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை சோ்ந்த மாது (31), தொண்டி புதுக்குடியைச் சோ்ந்த சமயக்கண்ணு (24) என்பதும், கஞ்சாவை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்குடியைச் சோ்ந்த பாண்டித்துரை (28) என்பவரை போலீஸாா் திருப்பூரில் கைது செய்தனா். இதையடுத்து, அவரை தொண்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.