இருதரப்பினா் மோதல் வழக்கு: தந்தை, மகன் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே இரு தரப்பினா் மோதல் வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா்.
கசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (25). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா் குமாருக்கும் (60) நிலம் தொடா்பாக தகராறு இருந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஒருவரை ஒருவா் தாக்கி கொண்டனா். புகாரின் பேரில், கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா், அவரின் மகன் மாது (30) ஆகிய 2 பேரை கைது செய்தனா்.