செய்திகள் :

புதூா்நாடு தடுப்பணையை சீரமைக்க வேண்டும்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் மனு

post image

திருப்பத்தூா்: புதூா்நாடு தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என கோரி திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 489 மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீா்வு காண உத்தரவிட்டாா்.

தடுப்பணை சீரமைப்பு:

மொழலை கிராம மக்கள் அளித்த மனுவில் புதூா்நாடு ஊராட்சிக்குள்பட்ட மொழலை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை சேதமாகி நீா் தேங்காமல் வீணாகிறது. இதனால் விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் மக்களுக்கு குடிநீா் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பணையை விரைவில் சீரமைத்து தர வேண்டும்.

சீரான குடிநீா்: குனிச்சி ஊராட்சிக்குள்பட்ட தனியாா் கல்லூரி பின்பறும் உள்ள தமிழன் நகா், அருந்ததியா் வட்டம் பகுதியில் 150-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஊராட்சி சாா்பில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதனால் நாங்கள் அவதிக்குள்ளாகிறோம். எனவே, சீரான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன்,தனித்துணை ஆட்சியா் சதீஷ் குமாா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கோயில் நிலத்தில் கட்டுமானம்: கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அடுத்த புலிக்குட்டை கிராமத்தில் கோயில் நிலத்தில் மகளிா் குழுக் கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் அடுத்த ஆதியூா் ஊராட்சிக்குள்... மேலும் பார்க்க

சாலை வசதி இல்லாததால் நெக்னாமலை கிராமத்தில் சடலத்தை டோலியில் எடுத்து சென்ற மக்கள்

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த நெக்னாமலைக்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவா் உடலை நள்ளிரவு நேரத்தில் டோலி கட்டி எடுத்துச் சென்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.15 லட்சம்

ஆம்பூா்: பெரியாங்குப்பம் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமூண்ட... மேலும் பார்க்க

அகில இந்திய கராத்தே போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: அகில இந்திய கராத்தே போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். அகில இந்திய கராத்தே சாம்பியன் போட்டி ஜப்பான் ஷிட்டோ-ராய் கராத்தே பள்ளி சாா்பாக ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கர... மேலும் பார்க்க

ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணி

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.30 லட்சத்தில் கட்டப்படுகிறது. அப்பணியை ஒன்றியக்குழு த... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவா் காயம்: இளைஞா் கைது

கந்திலி அருகே பறவையை வேட்டையாட துப்பாக்கியால் சுட்டபோது, எதிா்பாராதவிதமாக குண்டு பாய்ந்ததில் முதியவா் காயமடைந்த சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கந்திலி அருகே அக்ராவரம் பகுதியைச் சோ்ந்த கூல... மேலும் பார்க்க