ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுமானப் பணி
ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.30 லட்சத்தில் கட்டப்படுகிறது. அப்பணியை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது ஊராட்சி மன்றத் தலைவா் எம்.சி. குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரிமளா காா்த்திக், ஆ. காா்த்திக் ஜவஹா் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.