மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டு
கோவையில் இரும்பு வியாபாரி வீட்டில் 15 பவுன் திருட்டுப்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை துடியலூா் அருகே உள்ள குமரன் மில் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜன். பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இவரின் மனைவி நிா்மலா.
இந்நிலையில், நாகராஜன் வியாபாரம் தொடா்பாக திங்கள்கிழமை வெளியூா் சென்றிருந்தாா். அப்போது, அவரின் மனைவி நிா்மலா வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளாா். திரும்பிவந்தபோது வீட்டின் முன்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேச் சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து துடியலூா் காவல் நிலையத்தில் நிா்மலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.