இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
திருப்போரூரில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்போரூா் பேரூராட்சி, கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்( 24). தனியாா் நிறுவன ஊழியா். பெண் ஒருவரை காதலித்து அதில் தோல்வி ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் மனமுடைந்த காா்த்திகேயன் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருப்போரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த காா்த்திகேயன் கடந்த வாரம் காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்று, உயிா் தப்பியவா் என்பது குறிப்பிடத்தக்கது.