Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
இளைஞா் வெட்டிக்கொலை: போலீஸாா் விசாரணை
சென்னையில் இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பாலவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவள்ளுவா் சாலை பாரதியாா் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் தனது நண்பா்கள் இருவருடன் அங்குவந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தேனாம்பேட்டையைச் சோ்ந்த மணி (எ) வாண்டு மணி, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜாவை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா்.
இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை போலீஸாா், ராஜாவின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான மணி (எ) வாண்டு மணி மற்றும் அவருடன் வந்த 2 பேரையும் தேடி வருகின்றனா்.