அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!
`உங்கள் குழந்தைகள் எதிர்காலம் சிறக்க' ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் உதவும் - ஏன் தெரியுமா?
2024 நவம்பர் 15 ஐப்பசி பௌர்ணமி நாளில் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை திருக்கோயிலில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது. உங்கள் குழந்தைகள் எதிர்காலம் சிறக்க ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் உதவும்! ஏன் தெரியுமா!
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஸ்ரீஅக்ஷர லலிதா ஞான வடிவானவள். கல்வியின் கடவுளான ஹயக்ரீவருக்கு குருவானவள். அக்ஷரம் என்றால் எழுத்துக்கள். எழுத்துக்களின் தலைவி என்பதால் இவளை வணங்க எண்ணும் எழுத்தும் வசப்படும். கல்வி கலைகளில் மேன்மையும் சொல்வாக்கில் செல்வாக்கில் சிறப்பான நிலையையும் இவளால் அடையலாம். உயர்கல்வி, உன்னதமான வேலை, அதற்கேற்ற ஊதியம், தகுந்த வேளையில் திருமணம், குழந்தைப்பேறு என மனித வாழ்வின் அத்தனை சிறப்புக்களையும் அடுத்தடுத்து வழங்கக் கூடிய கருணை தேவி ஸ்ரீலலிதாம்பிகை.
ஸ்ரீலலிதா ஆனந்தத்தின் நிறைவானவள். சகல ஆசைகளுக்கும் அப்பாற்பட்ட பூர்ணானந்தம் அளிப்பவள். அதனாலேயே ஞானிகள் இவளை சரண் அடைந்து ஆராதிப்பார்கள். மந்திர தந்திர யந்திர வடிவான ஸ்ரீஅக்ஷர லலிதா மந்திர வடிவில் வணங்கப்படுகிறாள். ஞானிகளும் சித்தர்களும் மந்திரங்களைக் கொண்டே இவளை வணங்கி பல வரங்களை அடைந்தனர். மந்திரங்களில் உயர்வானதும் சூட்சுமமானதுமான ஸ்ரீபஞ்ச தசாஷரி மந்திரம் லலிதாம்பிகையின் விருப்பத்துக்குரியது. மேலும் இது வேண்டியதை அடையச் செய்யும் மகாமந்திரம். பஞ்ச என்றால் ஐந்து, தசம் என்றால் பத்து, பஞ்ச தசாஷரி என்பது பதினைந்து அக்ஷரங்களைக் கொண்டது என்பது பொருள்.
ஸ்ரீசக்ர அல்லது ஸ்ரீ சக்ரமேரு வழிபாட்டு பூஜையில் அம்பிகையை ஆவாகணம் செய்யும் போது இந்த மந்திரத்தை பிரயோகித்து அம்பிகையை எழுந்தருளச் செய்வர். ஸ்ரீலலிதா பக்தர்களின் பிரச்னைகள் தீர, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் உபயோகமாகும் விதமாக வாக் தேவதைகள் இந்த ஹோம வழிபாட்டுக்காக ஸ்ரீபஞ்ச தசாஷரி மந்திரத்தை உருவாக்கினர். ஆதி பராசக்தியின் அருளைப் பெறுவதற்கான இந்த ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லாவித ஹோமத்தையும் செய்த பலன்களை பெறலாம் என்பது சிறப்பு.
குறிப்பாக உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க, படிப்புக்கேற்ற வேலை அமைய, திருமணம்; மகப்பேறு போன்ற மங்கல காரியங்கள் நடைபெற, வெளிநாட்டு வாய்ப்புகள்; பதவி உயர்வு போன்ற சகல வேண்டுதலுக்கும் இந்த ஹோமம் நிச்சயம் நல்ல தீர்வாக அமையும். காரிய வெற்றி, செல்வ வளம், தீய சக்திகள் அழிய, நோய்கள் விலக, நீண்ட ஆயுள் பெற, திருஷ்டிகள் விலக இந்த ஹோமம் சிறுபப்க நடத்தப்படுகிறது. அதே வேளையில் உலக சுபீட்சம், ஒற்றுமை, அமைதி ஆகியவற்றிற்காகவும் நடத்தப்படுகிறது.
அபூர்வமான இந்த ஹோமம் செஞ்சிக்கு அருகே செல்லப்பிராட்டி ஸ்ரீஅக்ஷர செல்வ லலிதாம்பிகை திருக்கோயிலில் 2024 நவம்பர் 15-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி நாளில், கார்த்தீக கௌரி விரதம், ஸ்ரீலக்ஷ்மி பூஜை, ஸ்ரீதுளசி விரதம் கூடிய நன்னாளில் ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெற உள்ளது. அது ஏன் இந்த கோயிலில் நடத்த வேண்டும் என்கிறீர்களா!
இந்த மகாசக்தி ஸ்ரீஅக்ஷ்ர லலிதாம்பிகை ஆலயம் ராமாயண காலத்தில் இருந்தே வழிபடப்பட்டது. அக்ஷ்ர ங்களை குறியீடாக கொண்டு மகரிஷி ரிஷியசிருங்கரால் வழிபடப்பட்ட சிறப்பு மிக்கவள் ஸ்ரீஅக்ஷர லலிதாம்பிகை. அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெரும் சக்திகளும் சேர்ந்து ஒரே சக்தியாக பரப்பிரம்ம சக்தியாக அக்ஷ்ர லலிதா செல்வாம்பிகையாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறாள். இங்கு ஸ்ரீலலிதையை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் 16 வகை செல்வங்களும் சேரும். மங்கல காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறும். மேலும் திருமண வரமருளும் தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் உள்ளதால் இது பரிகாரத் தலமாகவும் உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ரிஷ்யசிருங்கரின் மஹாயாகத்தால் தசரதர் புத்திரர்களை அடைந்தார். இலங்கை மன்னன் இராவணனை போரில் வீழ்த்த ராமபிரான் இந்த அம்பிகையின் ஆலயத்தில் சிறப்புமிக்க பஞ்சதக்ஷாச்சரி யாகம் செய்த பின்னரே இராவணனை வெற்றி பெற்றார் என்பது நம்பிக்கை. மேலும் காஞ்சிக்கு விஜயம் செய்த ஆதிசங்கரர் இந்த லலிதாம்பிகையே வழிபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சகல யுகங்களுக்கு முன்பு ஆதிபராசக்தி அங்காளம்மனானாக மலையனூருக்கு எழுந்தருளியபோது, அவளை தரிசிக்க சகல தேவர்களும் இங்கு வந்து காத்திருந்தார்கள் என தலபுராணம் கூறும். அவ்வகையில் தேவியின் மூல வடிவான ஸ்ரீலலிதாம்பிகை எழுந்தருளிய ஆலயம் இது எனப்படுகிறது. இன்னும் சிறப்பாக இந்த ஆலயத்தில் பீஜாட்சர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பலகை சிலையில் மகா மந்திரங்களின் சூட்சமம் அடங்கியுள்ளது. ஜகன்மாதா ஆதிபராசக்திக்கு உண்டான மந்திரத்தின் சூட்சம எழுத்துக்கள் அவை. இதை தரிசித்தாலே சகல மங்கலங்களும் வாழ்வில் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இத்தனை சிறப்புமிக்க இந்த கோயிலில் அபூர்வமான ஸ்ரீபஞ்ச தசாஷரி ஹோமம் நடைபெறவிருக்கிறது. இனியும் தாமதிக்காது உங்கள் பிள்ளைகள் நல்வாழ்வுக்காக இந்த ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். நிச்சயம் அவர்கள் வாழ்வில் நன்மையையும் மேன்மையும் பெறுவதைக் காண்பீர்கள்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07