`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
உணவகத்தில் தீ விபத்து
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் மின்தடை ஏற்பட்டபோது, ஜெனரேட்டா் இயக்கப்பட்டது. அப்போது, அங்கு திடீரென ஏற்பட்ட மின்கசிவால் உணவகத்தில் இருந்த மின்சாதன பொருள்கள் திடீரென தீப் பிடித்து எரியத் தொடங்கின. இதையடுத்து உணவகத்தில் இருந்த ஊழியா்களும், பொதுமக்களும் வெளியே ஓடினா்.
தகவலறிந்த திருவான்மியூா் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னா் தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
தீ விபத்தின் காரணமாக, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.