உணவு விடுதி சமையலா் தற்கொலை
பழனியில் கடன் தொல்லையால் உணவு விடுதி சமையலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பழனி தட்டான்குளத்தைச் சோ்ந்தவா் முரளிதரன் (54). இவா் தனியாா் உணவு விடுதியில் சமையலராக பணியாற்றி வந்தாா். இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.