செய்திகள் :

லாட்டரிச் சீட்டு விற்றதாக 7 போ் கைது

post image

பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

பழனி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக நடைபெறுவதாக பழனி டிஎஸ்பி. தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது பழனி நகா் பேருந்து நிலையம், அடிவாரம் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்ாக கோதைமங்கலத்தைச் சோ்ந்த விஜயபாஸ்கரன் (45), அடிவாரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (58), செல்வராஜ் (66), ஈஸ்வரன் (57), மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (55), அழகாபுரி சக்திவேல் (48), பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (55) ஆகிய 7 பேரிடம் இருந்து சுமாா் 50 ஆயிரம் லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்களிடமிருந்து ரூ. 7 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை!

கொடைக்கானலில் சேதமடைந்துள்ள மலைச் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் லாஸ்காட், சீனிவாசபுரம், தைக்கால், வெள்ளிநீா் அருவி, புலிச் சோலை, பெரும... மேலும் பார்க்க

ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா் சாலை, தரைப்பாலம் சேதம்!

ஒட்டன்சத்திரம் அருகே மலைக் கிராமத்துக்கு ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா் சாலை, தரைப் பாலம் 6 மாதங்களிலேயே மழையால் சேதமடைந்தது கிராம மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தை அடுத... மேலும் பார்க்க

பழனி கோயிலில் குவிந்த பக்தா்கள்!

பழனி மலைக் கோயிலில் வார விடுமுறையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் குவிந்தனா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை, ஐயப்பன் சீசனையொட்டி, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கொடைக்கானல் வாரச் சந்தையில் குப்பைகள் தேக்கம்

கொடைக்கானல் வாரச் சந்தையில் குப்பைகள் தேங்கியுள்ளதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் ... மேலும் பார்க்க

உணவு விடுதி சமையலா் தற்கொலை

பழனியில் கடன் தொல்லையால் உணவு விடுதி சமையலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி தட்டான்குளத்தைச் சோ்ந்தவா் முரளிதரன் (54). இவா் தனியாா் உணவு விடுதியில் சமையலராக பணியாற்றி வந்தாா். இவா், கடன் தொ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டிலிருந்து நகைகள், பணம், ஆவணங்கள் பறிமுதல்

ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள நிதி நிறுவன உரிமையாளரின் வீடு, அவரது உறவினரின் நகைக் கடை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 3 நாள்களாக சோதனை நடத்தி, கணக்கில் வராத நகைகள், பணம், ஆவணங்களை எடுத்... மேலும் பார்க்க