உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் காட்டுத் தீ!
உதகை மாா்லிமந்த் அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறை, தீயணைப்புத் துறையினா் கட்டுப்படுத்தினா்.
உதகையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பனியின் தாக்கத்தால் வனப் பகுதியில் கருகிய நிலையில் சறுகுகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், உதகை அருகே உள்ள மாா்லிமந்த் அணைப் பகுதியில் புதன்கிழமை காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
